
மாதாந்தம் 180 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் மத ஸ்தலங்களுக்கு மானியம் வழங்கப்படக் கூடாது என எரிசக்தி நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், மத வழிபாட்டுத் தலங்களுக்கு சோலார் பேனல்கள் வழங்கப்படுமாயின், மாதாந்தம் 180 யூனிட் மின்சாரத்தை தாண்டும் அனைத்து இடங்களுக்கும் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
180க்கும் மேற்பட்ட மின்சார அலகுகளைக் கொண்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு எவ்வித அடிப்படையுமின்றி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சலுகைகளை வழங்கியுள்ளது என எரிசக்தி நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.