
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்றும் பல பிரதேசங்களில் முட்டை 55 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், காலி, மாத்தறை, கண்டி போன்ற பல பிரதேசங்களில் ஒரே விலையில் முட்டை விற்பனை செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அடுத்த வாரத்தில் இருந்து முட்டைக்கான அதிக தேவை குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, பண்டிகைக் காலங்களில் சுமார் 20 லட்சம் முட்டைகள் தேவைப்படும். ஆனால் இம்முறை அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.