
கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்டு பூஜ்ஜிய கோவிட் கொள்கையை அமுல்படுத்தியதால் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் சீனா, தனது மூத்த குடிமக்களின் நன்மைகளை குறைத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அந்நாட்டு முதியோர்களின் மருத்துவச் சலுகைகளை குறைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, சீனா அரசாங்கம் கடும் எதிர்ப்புகளை எதிர்நோக்கி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதோடு சீனாவின் பல நகரங்களில் இந்த மருத்துவச் சலுகைகள் குறைக்கப்பட்டதற்கு எதிராக முதியவர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்புகளால், சீனாவின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கை மேலும் சிதைவடையும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கோவிட் கொள்கையின் தோல்வி மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் சரிவு மற்றும் வங்கி அமைப்பில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஆட்சியின் மீது சீனா மக்களின் நம்பிக்கை ஏற்கனவே உடைந்துவிட்டதாகவும், அரசாங்க ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்துவது குறித்தும் சீனா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு எதிராக தொடர்ந்து அதிகரித்து வரும் பொது மக்களின் எதிர்ப்புகளின் பின்னணியிலும் சீனாகுறித்த
நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது.