
100 ஏக்கர் தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் இலவங்கப்பட்டை மாதிரி புதிய பயிர்களாக புதிய நடவு செய்யும் பணி கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தலைமையில் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காலி வலஹந்துவா தோட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. .
இதன்படி, தோட்ட அமைச்சின் கீழ் உள்ள தேயிலை சபை, தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தென்னை ஆராய்ச்சி நிறுவனம், தென்னை அபிவிருத்தி சபை, சிறு ஏற்றுமதி பயிர்கள் திணைக்களம், இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம், சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை போன்ற பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு,அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைமைத்துவத்தில். இந்தத் தோட்டங்கள் அனைத்தும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் செய்யப்படுவதுடன், சமூகப் பங்கேற்புடன் கலப்புப் பயிர்த் தோட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்த, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, மேலதிக செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஸ்ரீமால் விஜேசேகர மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் நிறுவனங்களின் தலைவர்கள், இந்நிகழ்வில் உள்ளுர் அரசியல் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.