
யாழ்ப்பாணம், நெடுந்தீவு துறைமுகப் பகுதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த 05 பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் இரண்டு ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, இந்த கொடூர கொலைகள் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் வயது முதிர்ந்தவர்கள் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.