
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய உள்நாட்டுக் கடனை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் உள்நாட்டு கடன் தொடர்பில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, உள்நாட்டுக் கடனைக் குறைப்பதன் மூலம் நாட்டின் நிதி அமைப்பு பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.