
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் தலைமையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றுள்ளார்.
இதன்படி, இங்கிலாந்தில் உள்ள பொதுநலவாய செயலகத்தில் குறித்த மாநாடு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுடன் இளைஞர் பங்கேற்பு மற்றும் கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் பொதுநலவாய அமைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக உறவுகளை வலுப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கானா ஜனாதிபதியுடன் இருதரப்பு கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதோடு பேராசிரியை மைத்திரி விக்கிரமசிங்கவும் மாநாட்டுடன் இணைந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.