
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (01) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் சென்றுள்ளது.
இதற்காக வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் என 26 பேர் கொண்ட குழுவொன்று இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து SL-141 என்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பாகிஸ்தானின் லாகூர் நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 5ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.