
குமார் தர்மசேனா உட்பட ஐசிசி நடுவர்களின் எமிரேட்ஸ் எலைட் குழுவின் அனைத்து நடுவர்களும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 இல் நடுவர்களாக இருப்பார்கள் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
இதன்படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கிரிக்கெட் உலகக் கோப்பையின் லீக்கிற்கான 20 போட்டி அதிகாரிகளை பெயரிட்டுள்ளதோடு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அதிகாரிகள் போட்டியின் சரியான நேரத்தில் பெயரிடப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பய, குறித்த பட்டியலில் 16 நடுவர்கள் மற்றும் நான்கு போட்டி நடுவர்கள் உள்ளதுடன் இதில் 12 பேர் எமிரேட்ஸ் எலைட் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் கிறிஸ்டோபர் கஃபேனி (நியூசிலாந்து), குமார் தர்மசேனா (இலங்கை), மரைஸ் எராஸ்மஸ் (தென்னாப்பிரிக்கா), மைக்கேல் கோஃப் (இங்கிலாந்து), நிதின் மேனன் (இந்தியா), பால் ரீஃபெல் (ஆஸ்திரேலியா), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), ரிச்சர்ட் கெட்டில்பரோ ( இங்கிலாந்து), ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), ஜோயல் வில்சன் (மேற்கிந்திய தீவுகள்), அஹ்சன் ராசா (பாகிஸ்தான்), மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (தென் ஆப்பிரிக்கா), என்பவர்களுடன் மீதமுள்ள நான்கு பேர் ஐசிசி வளர்ந்து வரும் நடுவர் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் ஷர்புத்தூலா இப்னே ஷாஹித் (வங்காளதேசம்), பால் வில்சன் (ஆஸ்திரேலியா), அலெக்ஸ் வார்ஃப் (இங்கிலாந்து) மற்றும் கிறிஸ் பிரவுன் (நியூசிலாந்து) ஆகியோர் அடங்குவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த அனுபவம் வாய்ந்த குழுவில் கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இறுதிப் போட்டியில் நடுவர்களாக இருந்த இதில் தர்மசேனா, எராஸ்மஸ், டக்கர் ஆகிய மூன்று நடுவர்கள் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த உலகக் கோப்பையை இழக்கும் ஒரே நடுவர் அலீம் தார் மட்டுமே. அவர் இந்த ஆண்டு மார்ச் மாதம் எலைட் குழுவில் இருந்து விலகியாமையே இதற்க்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.