வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம்.அலிசாப்ரி அவர்கள் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நசவூதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில் அமைச்சர் எம்.யு.எம்.அலிசப்ரி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, அங்கு அமைச்சர் எம்.யு.எம்.அலிசப்ரி, இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் மக்கா மற்றும் மதீனா நகரங்களின் ஆளுநர்களையும் சந்திக்க உள்ளார்.