நாளை (28ம் தேதி) இரவு 10 மணி முதல் 31ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தல் தொடர்பான அறிவிப்பை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, வெலிகம நகரம், காலி, மாத்தறை இடை வீதி (கடற்கரை வீதி) 3+050 கிலோமீற்றர் முதல் 4+050 கிலோமீற்றர் வரையிலான பகுதி வரையான போக்குவரத்து தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படும்.
வெலிகம நகரசபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “COCO VALLI” சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.