
பிரபல காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஷ் ஷாப்டர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்த்துள்ளார்.
இச்சம்பவமானது நேற்று பிற்பகல் பொரளை மயானத்தில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காரில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார். அதன் பின்னர் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த்துள்ளார்.