
02 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றினைப்பற்றி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையிட்ட போது 35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியினையுடைய ஐஸ் போதைப்பொருளுடன் பயணித்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கல்பிட்டி மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களைச் சேர்ந்த 39 மற்றும் 49 வயதுடையவர்களாவர்கள் எனவும் சந்தேகநபர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.