பீக்கிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, ஜனவரி 11 ஆம் திகதி வரை சீனாவில் 900 மில்லியன் மக்கள் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
மேலும், நாட்டின் மக்கள் தொகையில் 64% பேருக்கு வைரஸ் இருப்பதாக அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
இதன்படி, கன்சு மாகாணத்தில் 91% மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை காட்டுவதக்கவும், யுனான் மாகாணத்தில் 84% மற்றும் கிங்காய் மாகாணத்தில் 80% பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.