
கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 69 இலட்சம் ஆணையினை இழந்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் .ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை குறிவைத்து கும்பலாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திறமையானவர்கள் பலர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக திட்டமிட்ட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.