
அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகள் காரணமாக அதிகளவான இளம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பல மாகாணங்களில் இருந்து விசேட வைத்தியர்கள் வெளியேறியமையினால் ஏற்கனவே பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நிபுணத்துவ வைத்தியர்கள் வெளியேறுவதால் காலி பணியிடங்களை நிரப்புவது கூட மிகவும் கடினமாகும் என இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு, இலங்கையில் உள்ள 25 பார்வை நரம்பு திசு நிபுணர்களில் 10 பேர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னர் தெரிவித்திருந்தது.