
அத்தியாவசிய சேவைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் சுகாதாரத் துறையில் சுகாதார சேவை வழங்கல் முறையை மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
அத்தோடு, சுகாதார அமைச்சுக்கு மேலதிகமாக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.