
பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகளுக்காக செலவிடப்படும் தொகை ஓராண்டில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான 4.5 பில்லியன் ரூபா செலவாக இருந்த நிலையில், இந்த வருடம் 16 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கடந்த வருடம் பாடசாலை சீருடைகளுக்காக 3.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும், இந்த வருடம் 12 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற உரையில் தெரிவித்தார்
இதேவேளை, இராஜாங்க அமைச்சர்களுக்காக 239 சொகுசு வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பிலும் இன்று கருத்துக்களும் வெளியிடப்பட்டன.