
நாட்டுக்கு நல்லதொரு எதிர்காலத்தை வாரி வழங்குவதற்கு சிறுவர்கள் ஆங்கில ஊடகம் மற்றும் தொழிநுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன்படி, திஸ்ஸமஹாராமய யதலதிஸ்ஸ ஆரம்பப் பாடசாலையில் நட்புறவு வகுப்பறைக்கான கணனிகள் மற்றும் உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட “சக்வல” நிகழ்ச்சித்திட்டத்தின் 28வது நிகழ்ச்சி இப்பாடசாலையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு, அங்கு எதிர்கட்சித் தலைவர் தலைமையில் பாடசாலைக்கு ஏறக்குறைய பத்து இலட்சம் ரூபா பெறுமதியான கணனிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் 22 பாடசாலைகளுக்கு விரைவில் கணனிகள் வழங்க எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.