
ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 04 உடன் மூன்று சந்தேக நபர்களை இங்கினியாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, 23 மற்றும் 26 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நேற்றிரவு இங்கினியாகல நகரில் உள்ள மதுபானக் கடையொன்றுக்கு வந்த நபர் ஒருவர் ஐயாயிரம் ரூபா நாணயத்தாளை கொடுத்து மதுபான போத்தல் ஒன்றை வாங்கிக்கொண்டு மீதி பணத்தை எடுக்காமல் முச்சக்கரவண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.
இதேவேளை, முச்சக்கரவண்டியை துரத்திச் சென்ற குறித்த மதுபானசாலை ஊழியர்கள் அங்கிருந்த மூன்று சந்தேக நபர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, சந்தேகநபர்களை பரிசோதித்த போது சந்தேகநபர் ஒருவரிடமிருந்து ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 04 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் கடற்படை வீரர் என தெரியவந்துள்ளது.