
இன்றைய மே தின ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்காக பொலிஸார் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
இதன்படி, பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, கொழும்பு நகரில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு அதில் பங்குபற்றும் மக்களின் பஸ்கள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியான இடங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மேலும் பல மேதின பேரணிகளில் கலந்து கொள்ளவுள்ள மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தரிப்பிடங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது.
கொழும்பில் இன்று பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 3500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் தலைமையகம் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை வழங்கியுள்ளதாகவும் வெளி மாகாணங்களில் நடத்தப்படும் மே தின பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க புதிய வேலைத்திட்ட்ங்கள் செயற்பட்டில் உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.