அமெரிக்கா டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக கடந்த சில நாட்களாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, சிங்கள தமிழ் புத்தாண்டின் போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகளும் குறைவடையும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 80 ரூபாவினாலும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.