மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடையை நவம்பர் 24 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், சந்தேகத்திற்குரிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டுள்ளார்.
தென்மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு இன்று மீளப்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.