
உறுப்பினர் எண்ணிக்கையை குறைத்து புதிய பிரிவுகளின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாது என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எனவே தற்போதுள்ள பிரதேச முறைமையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மேலும், தெரிவித்தார்.
இதன்படி, உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் ஏற்படும் செலவை குறைக்கும் வகையில் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை பாதியாக குறைக்க வேண்டும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.
மேலும்,புதிய எல்லை நிர்ணயத்தின் மூலம் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 4000 ஆக குறைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.