
உர விநியோக திட்டம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றது. வரவு செலவு திட்ட குழு விவாதத்தின் 12வது நாளான இன்று, விவசாய நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் அமைச்சுக்களின் வரவு செலவுத்திட்டங்கள் மீதான விவாதம் இடம்பெற்றது.
இதனை, சமகி ஜனபலவேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.
மேலும், குறித்த விவாதத்தில் விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர உர விநியோக வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன விவாதத்தில் கலந்து கொண்டு தனது கருத்தினையும் வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து, உர விநியோகம் தொடர்பில் விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்துக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் விவாதம்மொன்றும் இடம்பெற்றது.