
(எஸ்.அஷ்ரப்கான்)
ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் 2022/2024 உயர்தர மாணவர் வரவேற்பு மற்றும் பெற்றார் கலந்துரையாடல் நிகழ்வு
பாடசாலை அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் வலயத்தலைவர் முஹம்மட் இஸ்மாயில் இன் வழி நடாத்தலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர் ஐ.அஹமட் ஜுமான் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.
இங்கு, பிரதி அதிபர்களான எம்.ஏ.கமறுன்நிஸா, எம்.ரீ.எம்.சியாத், உதவி அதிபர்களான எம்.எச்.மஹ்மூத் நஸீம், ஏ.ஜே.எம்.றினீஸ் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும்
கலந்து கொண்டனர்.