
யாரும் விரும்பாவிட்டாலும் அரசாங்கத்தை நடத்துவதற்கு வரி விதிக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறு வரிவிதிப்பு விதிக்கப்படாவிட்டால், அரசாங்கத்தை எவ்வாறு நடத்துவது என்பது ஒரு தீவிரமான பொருளாதார உரையாடலாக அமையும் என்று காலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, நாட்டில் நடைபெற்ற எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்சார நெருக்கடியை நாட்டில் பலர் மறந்துவிட்டதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.