
பத்தரமுல்ல பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேகநபர்களில் ஆணுக்கு 27 மற்றும் பெண் 23 வயதுடையவர் எனவும் இவர்கள் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அண்மையில் இந்த வர்த்தகரின் சடலம் பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டின் குளியல் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது.