
இலங்கையின் பிம்பத்தை உயர்த்தி வெளிநாட்டு நேரடி முதலீட்டின் ஈர்ப்பை அதிகரிக்க 5 நாடுகளுக்கு ஐந்து முதலீட்டு வர்த்தக நாம தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த துறையின் நிபுணர்கள் வர்த்தக நாம தூதுவர்களாகவும் அந்த நாடுகளின் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்தியாவுக்கு சிவ சுப்ரமணியமும், மலேசியாவுக்கு முஹமட் ஹில்மி கரீமும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தக்சிலா பிரேமசிறியும் நியமிக்கப்பட்டுள்ளதோடு சஞ்சீவ சுரவீர தென் கொரியாவுக்கான தூதுவராகவும், கென்னையாவுக்கான தூதுவராக கஜன் என்பவறையும் பிநியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அத்தோடு, ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இலங்கையை மிகவும் நம்பகமான மற்றும் வசதியான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரும் விரைவாகச் செயல்பட வேண்டும் என்றும், காலாவதியான மற்றும் மிகவும் கடினமான முறைகளைத் தவிர்த்து உடனடி மற்றும் வெளிப்படையான முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.