
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த திடீரென இடைநிறுத்தப்பட்ட அரச சேவைக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நாளை நடைபெறவிருந்த அரச சேவை பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்படாது என பரீட்சைகள் திணைக்களம் நேற்று அறிவித்தது.
இதன்படி, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கு சிவில் சேவை பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக இந்த பரீட்சை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடதக்க விடையமாகும்.