
சூடானில் நடைபெற்று வரும் மோதல்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது.
இதன்படி, அமெரிக்கா இராஜதந்திரிகள் குழுவை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், குறித்த வாகனங்களில் பயணித்த எந்தவொரு அதிகாரிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதோடு ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சூடானின் தூதுவர் மீதான தாக்குதலுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.
மேலும், சூடான் இராணுவத்திற்கும் அதிகாரபூர்வமற்ற ஆயுதக் குழுவிற்கும் இடையில் பல நாட்களாக இடம்பெற்று வரும் மோதல்களினால் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2000 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.