
மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (04) பிற்பகல் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனைச் சேவைகள் பணிப்பாளருடன் நடத்திய கலந்துரையாடலில் தெரிவில்லப்பட்டுள்ளது.
இதன்படி,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது மற்றும் தனியார் துறையினரின் பங்கேற்பு தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அமைச்சகத்தில் சிறப்புப் பிரிவை நிறுவி, தொடர்புடைய திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்துவது குறித்தும், தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது குறித்தும், அந்தத் திட்டங்களுக்கும் பிற புதுப்பிக்கத்தக்க திட்டங்களுக்கும் தேவையான நிதியுதவி வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.