
வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் குழு இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதுடன் அவர்களில் வவுனியா தெற்கு பிராந்திய சபைக்கு போட்டியிடும் கசுன் சுமதிபாலவும் ஒருவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையில் இருந்து போட்டியிட்டு உள்ளூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் ஆவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார வவுனியா மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த போது குறித்த குழு இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வவுனியா மாவட்ட முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமரத்ன சுமதிபாலவும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.