
தற்போதுள்ள முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக 300 பெற்றோல் முச்சக்கரவண்டிகள் மின்சார முச்சக்கரவண்டிகளாக மாற்றப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இவ்வாறு எதிர்காலத்தில் 5 இலட்சம் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.