பண்டாரகம, ரைகம பிரதேசத்தில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளுக்கு நிகரான போலி வாகன இலக்கத் தகடுகள் தயாரிக்கப்படும் இடமொன்றை பண்டாரகம பொலிஸார் சுற்றிவளைத்து அதன் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், பல போலி வாகன இலக்கத் தகடுகள் மற்றும் அவற்றின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களை கண்டுபிடித்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை, மில்லனிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர்.என பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்;ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சம்பந்தப்பட்ட இடத்தில் மோட்டார் போக்குவரத்து துறை ஜிஎம்டி என்ற ஆங்கில எழுத்துகள் கொண்ட ஸ்டிக்கர் ஷீட்கள், நம்பர் பிளேட்கள் தயாரிக்கப் பயன்படும் பல்வேறு அளவுகளில் பிளாஸ்டிக் மற்றும் இரும்புத் தகடுகள், நம்பர் பிளேட் தயாரிக்கும் இயந்திரம், பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட போலி நம்பர் பிளேட்களின் புகைப்படங்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டதோடு மேலும்,
அங்கு கையடக்கத் தொலைபேசி மற்றும் கணனி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த இடத்தை நடத்துவதால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், இதை சிலர் பல்வேறு குற்றச்செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.