
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகள் பஸ் சேவைகளை ஒழுங்குபடுத்துவதை தவிர்த்து பணம் சம்பாதிக்கும் நிறுவனமாக செயற்படுவதாக பஸ் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
மேலும், ஆணைக்குழு ஏறக்குறைய 1000 ரூபாவினை கட்டணமாக வசூலித்தமை ஒரு உதாரணம் என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, அரை சொகுசு பேருந்துகளை வழக்கமான சேவைகளுக்கு பயன்படுத்துவதால் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.