
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறுகையில், விலை உயர்த்தப்பட்டால், அதன் தயாரிப்புகளை நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியாது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, தற்போது நிலவும் பிரச்சனைகளால் இதுவரை 2000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் மேலும், அவர் தெரிவித்தார்.