
விமானக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் வெற்றிடங்களுக்கு 50 புதிய அதிகாரிகளை பயிற்சிக்காக நியமிக்குமாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால விமான நிலைய மற்றும் விமான நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு அறிவித்துள்ளார்.
மேலும், பயிற்சி நடவடிக்கைகளுக்கு தற்போதுள்ள தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளையும் வழங்குமாறு விமான சேவையின் தலைவருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, 50 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஏப்ரல் 1ஆம் திகதிக்குள் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.