
ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணத்தை தொடர்வதற்கு அரசாங்கம் தீவிரமாக பங்களிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய குறிகாட்டிகளுக்கு அமைவாகவே நாட்டின் ஆட்சி நடைபெறுவதாகவும், அந்த குறிகாட்டிகளுக்கு அப்பால் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படாது எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஒரு நாடு இவ்வாறான ஆபத்தான நிலையில் இருக்கும் போது அரசாங்கம் கவனமாகவும் பொறுப்புடனும் சர்வதேச மரபுகள் மற்றும் உடன்படிக்கைகளை மதித்து செயற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.