
பத்தரமுல்லையில் கல்வி அமைச்சுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான வழக்கு இன்று (27) கடுவெல நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 48 பிக்குகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.