
இன்று உலக உடல் பருமன் தடுப்பு தினம். “விழிப்புடன் இருப்போம் – உடல் பருமனில் இருந்து விடுபடுவோம்” என்பதே இந்த ஆண்டு கருப்பொருளாகும் என இலங்கை போஷாக்கு மருத்துவ சங்கத்தின் பேராசிரியரும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்தியருமான வைத்தியர் பூஜித விக்கிரமசிங்க தெரிவிதத்தார்.
மேலும், குழந்தைப் பருவத்தில் பருமனாகும் 75 வீதத்திற்கும் அதிகமானோர் வயது முதிர்ந்த நிலையில் பருமனாகின்றதாவும் சர்க்கரை நோய், இதயநோய், பக்கவாதம் வருவதற்கான வயது வரம்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, உடல் பருமன் அதிகரிப்பதால் இதய நோய் அபாயமும் அதிகரிப்பதாக இருதயநோய் நிபுணர் கல்லூரியின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் சம்பத் விதானவாசம் தெரிவித்தார்.
இதற்கிடையில், சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2035 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதிக எடை அல்லது பருமனாக இருக்கலாம் என்று உலக உடல் பருமன் கூட்டமைப்பு நேற்று எச்சரித்ததுள்ளது.