
எதிர்காலத்தில் ஏற்படும் நிலநடுக்க அபாயத்தின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வுகள் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உட்பட தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கி இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜனக அஜித்பிரேம தெரிவித்தார்.
அத்தோடு, கடந்த காலத்தில் புத்தல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இந்தியாவில் இமயமலைக்கு அருகில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கையில் அதன் தாக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜானக அஜித்பிரேம கூறுகையில், உலகில் எட்டு ரிக்டர் அளவை விட மூன்றுக்கும் குறைவான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.