
அரசியலமைப்பின் 21வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீக்கப்பட்ட போதிலும், உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தனது செயற்பாடுகளை தொடர புதிய ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக அதன் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்பு சபையினால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை, தனது பணிகளை தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், அன்றிலிருந்து தாம் ஆற்றிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, புதிய தேர்தல் ஆணைக்குழுவுக்கும் தாம் விண்ணப்பித்துள்ளதாக தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதே சிறந்தது என தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் தீர்மானித்துள்ளதாவும் தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது.