
கா.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்வதில் இரண்டு வாரங்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை தாமதமாகும் சாத்தியம் காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், மட்டக்குளி புனித ஜோன் மகா வித்தியாலயத்திற்கு இன்று வருகை தந்த கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.