
உக்ரைனுக்கு முன்னால் ஏற்பட்ட கடுமையான தோல்விகள் மற்றும் உயிரிழப்புகள் காரணமாக தற்போது சிறையில் இருக்கும் பெண் கைதிகளை போர் முனைக்கு அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், கடந்த வாரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்யா வீரர்கள் உயிரிழந்ததையடுத்து ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, கடந்த வாரம், உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள போர் முனைக்கு முதல் முறையாக பெண் கைதிகள் குழுவை ரயிலில் அனுப்ப ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, போர் முனைக்கு அனுப்பப்படும் பெண் கைதிகளை ரஷ்யா இராணுவ வீரர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக பணிகளுக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், பல்வேறு கடுமையான குற்றங்களில் தண்டனை பெற்ற கைதிகளை உக்ரைன் போர் முனைக்கு அனுப்ப ரஷ்யா அரசாங்கம் முடிவு செய்ததோடு கைதிகளின் சிறைத்தண்டனை இடைநிறுத்தப்பட்டு 06 மாத சேவையின் பின்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போர் முனைக்குச் செல்லும் கைதிகள் ரஷ்யப் படைகளுக்கு ஆதரவான தனியார் இராணுவ சேவையான “வாக்னர்” உடன் பணிபுரியவுள்ளனர்.