
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் நேற்று ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தானையும் கடுமையாக பாதித்துள்ளது.
இதன்படி, நிலநடுக்கத்தின் தாக்கத்தால் 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 180 கிமீ ஆழத்தில் இருந்ததாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹாட், லக்கி மார்வாட் உள்ளிட்ட பல நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குஜ்ரன்வாலா, குஜராத், சியால்கோட் உள்ளிட்ட பல நகரங்களும் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதோடு அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியே வந்து இரவு நேரங்களில் சாலைகளுக்கு அருகில் எப்படி தங்கினார்கள் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, நிலநடுக்கம் ஏற்பட்ட போது ராவல்பிண்டியில் உள்ள சந்தையில் கூடியிருந்த மக்கள் மத்தியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதோடு சில பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானில் நிலநடுக்கத்தில் உயிரிழந்த ஒன்பது பேரில் இருவர் பெண்கள் எனவும் மேலும் 160 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் தவிர, இந்தியா, ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.