முட்டை ஒன்றின் உற்பத்தி விலை 20 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாறானதொரு பின்னணியில் வீழ்ச்சியடைந்துள்ள சிறு முட்டை உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கு சுகாதார மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களம் உரிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்..
இது தொடர்பான மேலதிக தகவல்களை அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அனுமதி கிடைத்தவுடன் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.