
கடமையில் ஈடுபட்டிருந்த போது மின் கேபிளை இழுக்கச் சென்ற இராணுவ வீரர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
வத்தளை, ஹெக்கித்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், இவர் மட்டக்குளி காகடுபத்த பகுதியில் உள்ள இராணுவ குடியிருப்பில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.