
அமெரிக்காவின் உயர் இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கொண்ட குழுவொன்று அமெரிக்கா விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சிறப்பு விமானங்களில் நாட்டை வந்தடைந்துள்ளது.
மேலும், இவர்களின் வருகையையொட்டி கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 03 நாட்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, நாட்டிற்கு வந்த குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரண்டு பொலிஸ் வேன்கள் உட்பட 12 வாகனங்களில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு குறித்த காலப்பகுதியில் கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் வேறு எந்த வாகனமும் நுழைய அனுமதிக்கப்படவில்லை எனமேலும் எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.