
செலவின வரிசையை மாற்ற வேண்டுமாயின் பொருளாதார நிர்வகிப்பில் சிரமம் ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் தருணத்தில், நாட்டின் வருமானத்திற்கு ஏற்ப செலவின வரியை தயாரித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும்குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தெஹியோவிட்ட – அட்டலுகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இம்மாதத்தில் சமூர்த்தி கொடுப்பனவு, பாடசாலை கையேடு அச்சிடுதல், நெல் கொள்வனவு, அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் வழங்கல் போன்றவற்றுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதற்கேற்ப இந்த வரியை மாற்றினால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.